இரணியல் பேரூராட்சி தலைவர் ஸ்ரீ கலா முருகன், ஆழ்வார்கோவில் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் மீது இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேரூராட்சியில் தவறான வேலைகளை செய்யும்படி தன்னை மற்றும் செயல் அலுவலரை சதீஷ்குமார் கட்டாயப்படுத்தியதாகவும், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கவுன்சிலர் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.