இரணியல்: பேய் அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை

குருந்தன்கோடு அடுத்த காடேற்றி என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசுப்பு மகன் இசக்கிமுத்து (32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கிமுத்து இறக்கும் முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும் அதனால் அதனுடன் செல்வதாகவும் எழுதி வைத்துள்ளார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி