மாலையில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு திறந்து கிடந்தது. பூஜை அறையில் வைத்திருந்த ரூபாய் 10 லட்சம் மற்றும் இரண்டு செல்போன்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சகாய ஜெசிந்தா தனது தங்கை வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக ரூ. 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை அவர்கள் திருப்பி கொடுத்ததை அவர் பூஜை அறையில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு பிறகு சகாய ஜெசிந்தா வீட்டில் வேலை செய்து வந்த பெண், அவரது கணவர் மாயமாகி உள்ளனர். இதனால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.