வெள்ளிச்சந்தை: பைக் மோதி அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு

வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவரான ராஜ்குமார் (55), சம்பவத்தன்று மாலை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பைக் மோதி பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை போலீசார், விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீ ராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி