இதற்காக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மீனவர்கள் கூட்டத்திற்கு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏராளமான போலீசார் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஆங்காங்கே போலீசார் பேரிகார்ட் அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தி கூட்டமாக வருபவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.