மேலும் இந்த சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே திருமணம் செய்வதாக வாலிபர் ஒருவர் ஏமாற்றியதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறப்ப டுகிறது. இது தொடர்பாக ஆஷா புஸ்ராவின் உறவினர் அபுல் பயாத் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று (செப்.26) புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் ஆஷா புஸ்ரா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில் என்னுடைய சாவிற்கு தனியார் நிறுவன உரிமையாளரும் அவரது நண்பர் மற்றும் போலீசார் காரணமென எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆஷா புஷ்ரா விஷம் குடித்த பிறகு வாக்குமூலம் அளித்துள்ள வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.