இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கூறியதாவது: - சட்டமன்ற உறுப்பினர் சொன்ன கால்வாய் மட்டுமல்ல, பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடுகிற ஆறுகள் எல்லாம் கடந்த பெருமழையால் கரைகள் அரிக்கப்பட்டு தெருவுக்கும், கரைக்கும், ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமை நீள்கிறது. இதை ஒரு பெரும் முயற்சி எடுத்து, பெரும் திட்டத்தோடு, ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். எனவே, உறுப்பினர் சொன்னதை தனிக் கவனமாகச் செலுத்தி என்னவென்று கேட்டு சொல்லி ஆணைக்கு உட்படுத்துகிறேன். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு