இதை அடுத்து டாக்டர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் , போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சுரேந்திரன் கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த நிலையில் அவர் விஷ மாத்திரைகளை தின்றதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (06.06.2024) காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சுரேந்திரனுக்கு மனைவியும இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.