அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மனாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக
திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த வருட விழா இன்று (அக்.,1) தொடங்கியது. காலை 7. 30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்டவர்மா உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
கேரள அறநிலையத்துறை மந்திரி வாசவன் முன்னிலையில் தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் உடைவாளை எடுத்து குமரி மாவட்ட திருகோயில்கள் இணை ஆணையர் பழனிகுமாரிடம் உடைவாளை ஒப்படைத்தார். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் ஊர்வலம் புறப்பட்டது. இந்த நிகழ்வில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.