இந்த நிலையில் இவரது வீட்டு காம்பவுண்ட்டிற்குள் நேற்று (செப்.,4) அதிகாலை நுழைந்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்த வெண்கலத்தினால் ஆன குட்டுவத்தை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. அதில், 2 மர்ம நபர்கள் பைக்கில் வருகின்றனர். அங்கு அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து வெண்கலத்தில் ஆன குட்டுவத்தை தூக்கிக் கொண்டு பைக்கில் செல்கின்றனர். இந்த சம்பவம் சுமார் 4 நிமிடத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.