பெத்தேல்புரம்: இலவச மருத்துவ முகாம் ​

குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குளச்சல் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பெத்தேல்புரம் சி எஸ் ஐ சபை போதகர் ராஜன் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். பெத்தேல்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 138 பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாகப் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி