அருமனை: குளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

முக்கூட்டுகல் பகுதியைச் சேர்ந்த 58 வயது கூலித் தொழிலாளி ஷாஜி, நேற்று மதியம் அதிக மது அருந்திய மயக்கத்தில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அருமனை போலீசார் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕