நாகர்கோவிலில் ஆடை இல்லாமல் குளித்தவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்து நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின் (70). இவர் வீட்டில் ஆடை இல்லாமல் குளிப்பதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் பார்த்துள்ளார். இதை தொடர்ந்து அகஸ்டினை அவர் அழைத்துச் சென்று தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அகஸ்டின் மனைவி ஜெசிந்தா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி