விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் , சென்னையில் உள்ள டி. வி. எஸ். சுந்தரம் கிளைட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நடைபெற்ற வளாகத் தேர்வில் 110 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த வளாகத்தேர்வில் வேலை வாய்ப்பினை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை விவேகானந்தா கல்வி கழகத்தின் பொருளாளர் சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், சுந்தரம் கிளிட்டன் நிறுவனத்தின் மேலாளர் பெருமாள் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் ராம்குமார், நிர்வாக அதிகாரி முத்துக்குமார், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி