இதற்கு விஜய தரணி தரப்பில் முழுமையான மறுப்பு வெளியிடப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான தான் டெல்லியில் ஒரு வழக்கு விஷயமாக வந்திருப்பதாக மட்டுமே கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் விஜயதாரணி எம்எல்ஏ பாரதிய கட்சியில் இணைந்தார்.
விஜய தரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விஜயதாரணியின் உருவப்படத்தை எரித்தும், இவர் உடனடியாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் தலைமையில் காங்கிரஸார் விஜய் திராணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மார்த்தாண்டத்தில் கொண்டாடினர்.