அப்போது வீட்டின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 60 ரப்பர் ஷீட்டுகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பால்ராஜ் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் ரப்பர் ஷீட் திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று இரவு கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.