இந்தநிலையில் கடந்த மாதம் 9ந் தேதி வழக்கம்போல் ராஜு சிறுவ னுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் சிறுவனை அந்த பகுதி யில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவன் கட்டிடத்தில் இருந்து வெளியில் ஓடி வந்துவிட்டான். அப்போது சிறுவனிடம் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உனது பெற்றோரை கொன்றுவிடுவேன் என்று ராஜு மிரட்டினாராம்.
அது முதல் சிறுவன் ஒருவித பதற்றத்தில் இருந்துள்ளதை கவனித்த பெற்றோர் சிறுவனிடம் விசாரித்த போது பாலியல் தொல்லை குறித்து தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் தனலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராஜு மீது வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்.