இதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தக்கலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மனவளக்குறிச்சியில் செயல்படும் இந்திய மணல் ஆலைக்காக கடற்கரை கிராமங்களில் மணல் அகழாய்வு செய்ய மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செய்தியையும் வெளியிட்டுள்ளது.
இதனால் இனயம், இனயம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமும் உள்ளடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் மீனவ கிராமம் பாதிக்கப்படும். எனவே மணல் ஆலை அகழ்வாய்வு கடற்கரை பகுதியில் வேண்டாம் என எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக இரு தினங்கள் முன்பு அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று (18-ம் தேதி) மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அரிய மணல் ஆலையை மூட வலியுறுத்தியும் இனயம் தபால் அலுவலகத்தில் மனுகொடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.