தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த பொன்னேசம் (70) என்பவரின் மகன் ஞானசேகர் (42) மற்றும் அவரது மனைவி ஆஷா இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஆஷா தனது தாய் வீட்டில் புகார் அளித்தார். இதன் பேரில், 8 பேர் கொண்ட கும்பல் ஞானசேகரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியது. சண்டையை விலக்க முயன்ற பொன்னேசம் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதில், அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மூதாட்டி கணவர் ராமையன் அளித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.