புதுக்கடை: குளத்தில் தவறி விழுந்த வாலிபர் சாவு

புதுக்கடை, சடையன்குழி பகுதியைச் சேர்ந்த சுஜின் (37) என்பவர் நேற்று மாலை செட்டிகுளம் குளத்தின் கரை வழியாக நடந்து சென்றபோது தவறி குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுஜினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. புதுக்கடை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி