இதில் காருக்குள் இருந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடம் சென்று இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் காரில் வந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.