இதில் சாலையை ஒட்டி சுவர் அமைக்கும் பணி நடந்ததால் சாலையின் அகலம் குறைந்து வாகனங்கள் ஒன்றை ஒன்று வழி விட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தடுப்புச் சுவர் சாலை அகலத்தை பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற முன்சிறை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலையின் அகலம் பாதிக்காத வகையில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்ததாரரிடம் கூறினர். இதையடுத்து ஒப்பந்தக்காரர் தொடர்ந்து நடந்த பணியின் போது சாலை அகலம் பாதிக்காத வகையில் அமைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.