நித்திரவிளை: வீட்டை சூறையாடிய வாலிபர் கைது

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (36). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்று விட்டார். இரண்டாவதாக தூத்தூரை சேர்ந்த ரோஜஸ் என்பவரின் தங்கையை திருமணம் செய்துள்ளார். 

அதன் பிறகு ரோஜஸ்க்கும் செல்வனுக்கும் விரோதம் இருந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் கம்பியுடன் செல்வன் வீட்டிற்குச் சென்ற ரோஜஸ் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்த பைக்கை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். 

செல்வனை கம்பியைக் காட்டி மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இது குறித்து செல்வன் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரோஜஸ் (31) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி