நித்திரவிளை: கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

நித்திரவிளை சிறப்பு எஸ் ஐ கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று வாலிபர்கள் கூட்டாக கஞ்சா புகைத்துக் கொண்டு இருந்தனர். மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமான எஸ்எஸ்ஐ கிறிஸ்டோபர் அளித்த புகாரின்  பேரில் நித்திரவிளை போலீசார் அல்பிற்றோ (19), ஜெபின் ராஜ் (20 ), அபின்ராஜ் (18)ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி