புதுக்கடை: நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

குழித்துறை நகைக்கடையில் வேலை பார்த்த ராமன்துறை பகுதியை சேர்ந்த சிபின் நோயல் (36) நேற்று தனது வீட்டின் மாடியில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி