புதுக்கடை: மூதாட்டியின் செயின் திருடிய 2 பேர் கைது

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்த ஞானசெல்வம் (60) என்பவர் 6 ஆம் தேதி மாலை வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ குமார் (40) மற்றும் அனுமோகன் (48) ஆகியோரைக் கைது செய்து நகையை மீட்டனர். இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி