முஞ்சிறை: சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு

கிள்ளியூர், முஞ்சிறைப் பகுதியில் புதிய சார் பதிவக அலுவலக கட்டிடம் கட்ட தமிழக அரசு 1 கோடியே 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை குமரி மாவட்டம் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, முஞ்சிறை சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தை பத்திர பதிவுத்துறை துணை தலைவர் சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதல் பத்திர பதிவு செய்த நபருக்கு உடனடியாக பத்திரத்தை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி