மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட, நடுத்தேரி - குடுக்கச்சிவிளை – ஆனப்பந்தி - பிச்சன்விளை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த சாலைகளை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 40 லட்சம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் (MGSMT) கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணிகளை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள்தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.