குமரி: மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

கடியப்படணம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆன்டனி ஜினோ (38), மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி