குழித்துறை: முதல்வர் படம் ஒட்டிய 4 பாஜ கவுன்சிலர்கள் கைது

தமிழகத்தில்  டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி  முறை கேடு நடந்ததாக குற்றசாட்டை முன் வைத்தும்,     போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கபடுவதை கண்டித்தும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தபடும் எனவும்,   தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை பாஜக மகளிர் அணியினர் மாட்டுவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.  
        இதன் ஒரு பகுதியாக குழித்துறையில் உள்ள  டாஸ்மாக் கடையில் இன்று 22-ம் தேதி  பகல்  குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் மினிகுமாரி,   ஜெயந்தி, ரெத்தினமணி, விஜீ ஆகியோர் சென்று கோஷங்களை எழுப்பி முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.
      அப்போது டாஸ்மாக் கடை பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தி  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது  பாஜகவினர் ஒட்டிய முதல்வர் ஸ்டாலின் படத்தை கிழித்து எறிந்து படத்தை ஒட்டிய பாஜக கவுன்சிலர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி