குறும்பனை: வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

குறும்பனை பாத்திமாதெருவை சேர்ந்த ரோஸ்மேரி (68) என்பவர் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் பின்பக்கக் கதவை உடைத்து, படுக்கை அறையில் இருந்த 20 கிராம் தங்க நகை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றனர். இது குறித்து ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்து சோதனை நடத்தினர். இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி