குமரி: ஏடிஎம் மூலம் பண மோசடி வாலிபர் கைது

குமரி - கேரளா எல்லைப் பகுதியில் கிராமப்புற பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு கொடுத்து மோசடி செய்ததாக பாறசாலை ஷெபிக், கொல்லங்கோடு அபின் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரான குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34) என்பவரை நேற்று பாறசாலை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் மேலும் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி