கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் பேரூராட்சி திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், நேற்று திமுகவினர் கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து, முன்னாள் முதல்வர் படத்தை அகற்றிவிட்டு விஜய் படத்தை வைத்தனர். பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் தான் படத்தை அகற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி தலைவி சரளா கோபால் புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார்.