குலசேகரம் - பேச்சிப்பாறை சாலையில் திற்பரப்பு பேரூராட்சி சார்பில் மழை நீர் ஓடை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது இயந்திரம் மூலம் தோண்டப்படும் மண் மற்றும் கற்கள் முறைகேடாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பாஜக ஊடக பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் சுரேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.