குமரி: கடலில் முத்து குளித்த மீனவர் மூச்சுத் திணறி பலி

இனயம் பகுதியைச் சேர்ந்த ஏசுபாலன் (46), ஆன்றோ ரெதிஷ் (37), அமலதாசன் (40) ஆகிய மூவரும் தேங்காப்பட்டணம் அருகே கடலில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் முத்து குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூவரையும் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்ததில், ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி