நாகர்கோவிலில் நடைபெற்ற குமரி மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளில், மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர்.எம். அக்ஷரா, தர்ஷினி, சுருதி, ஜெஸ்லின், சாய்னா, ரேஷ்மா, ஜாய்லின், ஹெம்சி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.