குமரி: இந்திய தபால் துறை சார்பில் 12 சிவாலய யாத்திரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மஹா சிவாலய ஓட்டத்தின் சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. இந்த சிறப்பு அஞ்சல் உறையை முஞ்சிறை கோயிலில் இருந்து 12 கோயில்களுக்கு கொண்டு சென்று, 12வது கோயிலான நட்டாலம் கோயிலில் நாளை (16-ம் தேதி) வெளியிட உள்ளனர். இந்திய அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி