இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தனியார் அமைப்பை சேர்ந்த பிரபல மேஜிக் நிறுவனர் கோபிநாத் முத்துக்காடு தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பயண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இப்பயணமானது கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இன்று (6-ம் தேதி) தொடங்கப்பட்டு இரண்டாவது நிகழ்வாக குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்திலும் அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 41 நாட்கள் பயணம் மேற்கொண்டு இறுதியாக காஷ்மீர் சென்றடைய உள்ளது. இப்பயணம் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெற மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மேஜிக் நிறுவனர் கோபிநாத் முத்துகாடு, நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம் விரிவுரையாளர் திருமால் வளவன், நூருல் இஸ்லாம் உயர்கல்வி கல்வி குழுமம் பைசல்கான், பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.