கொல்லங்கோடு: 22 பவுன் நகை திருட்டுப் போனதாக பெண் பொய் புகார்

கொல்லங்கோடு அருகே மணலி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார். ராணுவ வீரர் அந்தமானில் பணியாற்றுகிறார். இவரது மனைவி அஜிதா (42). இவர் கடந்த மாதம் 11-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள உறவினர் ஒரு வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்று விட்டு 19ஆம் தேதி வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அப்போது பீரோவில் இருந்த 22 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனதாக அஜிதா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில் போலீசார் கேரள மாநிலம் பூவார் பகுதி வர்க்கீஸ் (28) பிடித்து விசாரித்ததில், பீரோவில் இருந்து ரூபாய் 7 ஆயிரம் மட்டும் எடுத்ததாகவும் நகைகள் ஏதும் எடுக்கவில்லை என்று தெரிய வந்தது. கொல்லங்கோடு போலீசார் அஜிதாவிடம் விசாரணை நடத்திய போது நகை எதுவும் திருட்டுப் போகவில்லை என்றும் பணம் மட்டும் திருட்டுப் போனதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து திருட்டை மிகைப்படுத்தி பொய்யான புகார் கொடுத்த அஜிதா மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி