விசாரணையில் திருட முயன்றவர் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த ஜோபின் (25) என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று (ஜூன் 4) மாலை ஜோபினை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஜோபின் திருமணமானவர் என்றும், பல லட்ச ரூபாய் கடன் இருந்ததால் ஏடிஎம்மை கொள்ளையடித்து கடனை அடைக்கும் எண்ணத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.