சூசைபுரம் காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மினி மெர்சி (20) மீண்டும் மர்மமான முறையில் காணாமல் போனார். கடந்த 20-ம் தேதி ஜென்சன் என்பவரின் வீட்டிற்குச் சென்றவர், அறிவுரைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மீண்டும் மாயமான அவரை, ஜென்சன் வீட்டிலும் காணவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை சகாயராஜன் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.