கொல்லங்கோடு: 3 நாட்களாக அனாதையாக நிற்கும் பைக்

கொல்லங்கோடு அருகே ஆனாட்டுப் பெருங்குளம் கரை பகுதியிலுள்ள தோட்டங்களில் பகல், இரவு நேரங்களில் குடிமகன்கள் உட்கார்ந்து மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல் கஞ்சா வாலிபர்கள் இந்த பகுதியில் கூட்டமாக நின்று கொண்டு கும்மாளம் போடுகிறார்கள். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக எண்ணிடப்படாத மொபட் வாகனம் ஒன்று அனாதையாக அந்த பகுதியில் நிற்கிறது. இதை கொல்லங்கோடு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி