இதற்கிடையில் சஜின் சாவில் மர்மம் உள்ளதாக தந்தை கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது.
இதற்கிடையில் சஜின் சாவுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்குவதில்லை என உறவினர்கள் மறுத்தனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சஜனின் உறவினர்கள் மாங்கரை பகுதியில் குற்றவாளிகளை கைது செய்ய கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பல அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக வந்த பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.
சம்பவம் அடைந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தொடர்ந்து இதேபோன்று நாளையும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.