கிள்ளியூர் பேரூராட்சி திமுக செயலாளரான சத்யராஜ், அவரது மனைவி பேரூராட்சி தலைவர் ஷீலா சத்யராஜ், அவர்களது இரண்டு மகன்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பத்மசீலன் ஆகியோர் குமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் சபியை சந்தித்து, சால்வை அணிவித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். குமரி மேற்கு மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.