கிள்ளியூர்: ரூ. 80 லட்சத்தில் சாலை ; எம் எல் ஏ துவக்கினார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவறை, நடைக்காவு, மெதுகும்மல் ஆகிய 3 ஊராட்சிகளில் 3 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை சீரமைப்பு பணிகளை நேற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிசாள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி