கருங்கல் அருகே செயல்பட்டு வந்த நகை அடகு கடையில் சுமார் 75 பேரின் 300 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியான முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த சைலஸ் என்பவரின் மகன் அகில் எஸ். விகானோ (27) என்பவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.