கருங்கல்: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு - வழக்கு

புதுக்கடை பகுதியை சேர்ந்த டிரைவர் ஷாஜி (35) திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஆப்பிகோடு பகுதியில் வந்தபோது, தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த சுஜின், அசோக், ரதீஷ், சுஜித், ரெஜி ஆகிய 5 பேர் முன்விரோதம் காரணமாக அவரை கல்லாலும், கம்பாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், ஷாஜி அணிந்திருந்த 5 பவுன் பிரேஸ்லெட் மற்றும் 5 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். கருங்கல் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி