களியக்காவிளை: அரசு பள்ளிக்கு மாநில அளவிலான பரிசு

சென்னையில் ஹைச் டி. எப். சி. எர்கோ என்ற காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது பள்ளி மாணவர்களிடையே வினாடி வினை போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த வினாடிவினா போட்டியில தமிழக அளவில் அரசு பள்ளிகளை சார்ந்த ஐந்நூற்று பத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கடைசி சுற்றில்  82 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இறுதி சுற்றில் 8 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது.
இதில் களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அனுஷரா, எஸ். லெட்சுமி, ஸ்ரீநிதி உள்ளிட்ட மாணவிகள் நான்காவது இடத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு அங்கில  பட்டதாரி ஆசிரியை ஸ்ரீதேவி பயிற்சி அளித்து சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி