இரணியல்: துபாயில் வேலை.. போலீசிடம் பணம் பறிப்பு

இரணியல், கண்டன்விளையைச் சேர்ந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் அரசு (59) என்பவரிடம், நெய்யூர் பகுதியைச் சேர்ந்த டென்சன் (53) மற்றும் அவரது மகன் டைசன் (28) ஆகியோர், அருள் அரசின் மகனுக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹1.20 லட்சம் மோசடி செய்துள்ளனர். வேலை வாங்கித் தராததால், குமரி மாவட்ட எஸ்பியிடம் அருள் அரசு புகார் அளித்தார். இதனையடுத்து, இரணியல் போலீசார் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி