இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய தனுஷ் அங்கு கைது செய்யப்பட்டார். இந்தத் தகவல் இரணியல் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று தனுஷை இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பத்து வருடங்களுக்குப் பிறகு தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலி மர்மமான முறையில் இறப்பு: கள்ளக்காதலன் கைது